பப்பாளி, கிவி ஜூஸ்

width="200"

தேவையான பொருட்கள்:-
 
 
பப்பாளிபழம்- பாதி.
கிவி பழம்- 15.
வென்னிலா ஐஸ் கிரீம்- ஒரு ஸ்கூப்.
தேன்- 2 தேக்கரண்டி.
ஐஸ் கட்டிகள்- 10 துண்டு.
 
செய்முறை:-
 
* பப்பாளி பழத்தில் சிறிய துண்டு, கிவி பழம் 5 எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
* மீதி உள்ள பப்பாளி, கிவி பழத்துடன் ஐஸ்கிரீம், ஐஸ் கட்டிகள், தேன், ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நல்ல அடித்து ஜூஸ் டம்ளரில் ஊற்றவும்.
 
• கடைசியாக பொடியாக நறுக்கி வைத்துள்ள பப்பாளி, கிவி பழத்துண்டுகளை போட்டு குடிக்கவும்.




புதினா டீ

width="200"


தேவையான பொருட்கள்...

புதினா இலை – 1 கைப்பிடியளவு
தண்ணீர் – 1/2 லிட்டர்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
சுகர் லைட் – தேவையான அளவு
எலுமிச்சம் சாறு – 1 டீஸ்பூன்

செய்முறை....

• தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் புதினா இலைகளைப் போட்டு, டீத்தூளையும் போட்டு 5 நிமிடம் கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

• சுகர் லைட்டை  போட்டு ஆறியதும் வடிகட்டி எலுமிச்சம் சாறு சேர்த்து பரிமாறவும்.




துளசி இஞ்சி பிளாக் காஃபி

width="200"


தேவையானவை....

துளசி இலை – 25 இலைகள்
இஞ்சி சாறு  - சிறிய துண்டு
லெமன் ஜூஸ் – 1 ஸ்பூன்
காஃபி பொடி – கால் ஸ்பூன்
சுகர் லைட் –  1 1/2 ஸ்பூன்
தண்ணீர் – 1 1/2 டம்ளர்

செய்முறை..........

• துளசி இலை சுத்தமாக கழுவி, இஞ்சி சேர்த்து நன்கு நசுக்கி சாறெடுக்கவும்.

• அதை தண்ணீருடன் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு காஃபி பொடி சுகர் லைட் கலந்து வடிகட்டி எலுமிச்ச்சை சாறு சேர்த்து குடிக்கவும்.

குறிப்பு :

தும்மல், இருமல், சளிக்கு ஏற்ற அருமையான துளசி இஞ்சி பிளாக் காஃபி. இப்ப இந்த பனிகாலத்தில் எங்கு பார்த்தாலும் எல்லோருக்கும் தொடர்ந்து தும்மல், சளி , இருமல் அதற்கு துளசி ஒரு அருமையான மருந்து. இதே போல் டீயாகவும் தயாரித்துக்கொள்ளலாம்.




த‌க்கா‌ளி ச‌ப்பா‌த்‌தி

width="200"


தேவையானவை....

கோதுமை மாவு - 2 கப்
பழு‌த்த த‌க்கா‌ளி - 3 ‌
மிளகா‌ய்‌ப் பொடி - அரை தே‌க்கர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - கா‌ல் தே‌க்கர‌ண்டி
உ‌ப்பு - ‌சி‌றிது
எண்ணெய் - 2 ஸ்பூன்

செ‌ய்முறை....

• த‌க்கா‌ளியை அரை‌த்து அதனுட‌ன் ‌மிளகா‌ய்‌ப் பொடி, ம‌ஞ்ச‌ள் தூ‌ள், உ‌ப்பு சே‌ர்‌த்து கல‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.

• கோதுமை மா‌வி‌ல் இ‌ந்த கலவையை‌ப் போ‌ட்டு ச‌ப்பா‌த்‌தி மாவு பத‌த்‌தி‌ல் ‌பிசை‌ந்து, அரை ம‌ணி நேர‌ம் ஊற ‌விடு‌ங்க‌ள். ‌‌

• பிறகு தேவையான அளவுக‌ளி‌ல் ச‌ப்பா‌த்‌திகளாக இ‌ட்டு தோசை‌த் கல்லி‌ல் வேகவை‌த்து எடு‌க்கவு‌ம்




ச‌த்துமாவு‌‌க் க‌‌ஞ்‌சி

width="200"


தேவையானவை....

பார்லி, கோதுமை, சோளம் தலா - 100 ‌கிரா‌ம்
தினை, கம்பு, கேழ்வரகு - 100 ‌கிரா‌ம்
பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு - 20
சோயா, கொள்ளு - தலா 100 ‌கிரா‌ம்
பால் - ஒரு டம்ளர்
வெல்லம் - தேவையான அளவு.

செய்முறை.....

* பார்லி, கோதுமை, சோளம், தினை, கம்பு, கேழ்வரகு, பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு, கொள்ளு, சோயா எல்லாவற்றையும் தனித்தனியாக சுத்தம் செய்து வெறும் கடாயில் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து ஆற வைத்து அரை‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

• ஒருவரு‌க்கு 4 தே‌க்கர‌ண்டி மாவை ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் போ‌ட்டு 2 டம்ளர் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி க‌ட்டி‌யி‌ல்லாம‌ல் ந‌ன்கு கரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

• பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறிகொண்டே இருக்கவும். ஈரக் கையில் கஞ்சியைத் தொடும்போது கையில் ஒட்டாத பதத்துக்கு வந்ததும் இறக்கவும்.

• பின்பு, கொதிக்க வைத்து ஆறிய பால், பொடித்த வெல்லம் சேர்த்துக் கலந்து குடிக்கலாம்.

• இ‌ந்த க‌‌ஞ்‌சியை குழ‌ந்தைக‌ள் முத‌ல் பெ‌ரியவ‌ர்க‌ள் வரை யா‌ர் வே‌ண்டுமானாலு‌ம் அரு‌ந்தலா‌ம். உடலு‌க்கு ‌மிகவு‌ம் ந‌ல்லது.




முளை கட்டிய பயறு சூப்

width="200"


தேவையான பொருட்கள்:

முளை கட்டிய பச்சை பயறு - 1 க‌ப்
தக்காளி - 1
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு விழுது - ‌‌1 ஸ்பூன் ‌
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
பு‌‌தினா இலை - சிறிதளவு

செய்முறை:

• பயறை ஆவியில் வேக வைத்து, மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

• வெங்காயம், தக்காளியையு‌ம் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

• அதே போல் இஞ்சி, பூண்டு விழுது அரைத்துக் கொள்ளவும்.

• எண்ணெயைக் காயவைத்து அதில் வெங்காயம், தக்காளி விழுது போட்டு வதக்கி, அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்‌த்து வத‌க்கவு‌ம்.

• அரைத்த பயறை இதனுடன் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பரிமாறும் போது தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், பு‌‌தினா இலை சேர்த்துக் கொள்ளவும்.




பூசணிக்காய் பச்சடி

width="200"


தேவையான பொருட்கள்...

வெள்ளை பூசணிக்கீற்று - 1
புளிக்காத கெட்டித் தயிர் - 1 கப்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 2
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை...

• பூசணியை தோல் நீக்கி, பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

• சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வைத்து இறக்குங்கள்.

• பச்சை மிளகாய், இஞ்சியை நன்றாக அரைத்து, பூசணித் துண்டுகளுடன் சேருங்கள்.

• அத்துடன் தயிரை கெட்டியாக சேர்த்து சீரகத்தூள் தூவி பரிமாறுங்கள்.

குறிப்பு: பூசணிக்காயைத் துருவி ஸ்டீம் செய்தும் பச்சடி செய்யலாம்.




முளைகட்டிய கொள்ளு சுண்டல்

width="200"

தேவையான பொருட்கள்..
 
 
முளைகட்டிய கொள்ளு- ஒரு கப்.
காய்ந்த மிளகாய்- 2.
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்- தலா அரை டீஸ்பூன்.
இஞ்சித் துருவல்- ஒரு டீஸ்பூன்.
பெருங்காயத்தூள்- அரை டீஸ்பூன்.
கறிவேப்பிலை- சிறிதளவு.
தேங்காய் துருவல்- 2 டேபிள்ஸ்பூன்.
உப்பு- தேவையான அளவு.
எண்ணெய்- 1 ஸ்பூன்.
 
செய்முறை:-
 
* முளைகட்டிய கொள்ளுவை குக்கரில் வேகவிடவும்.
 
* வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
 
* இதனுடன் வெந்த கொள்ளு, உப்பு சேர்த்துக் கிளறவும்.
 
* தேங்காய் துருவல் தூவி (தேவைப்பட்டால் தேங்காய் துருவல் சேர்க்கலாம்)இறக்கவும்.




வெஜ் ஜூஸ்

width="200"


தேவையான பொருட்கள்:

கேரட் – 1/2 கிலோ
வெள்ளரி – 100 கிராம்
தக்காளி – 100 கிராம்
வெள்ளை மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – 2 சிட்டிகை
சுகர்ஃபிரீ –  தேவையான அளவு
எலுமிச்சம்பழச்சாறு – 12 துளிகள்

செய்முறை:

• முதலில் கேரட்டின் தோலை கட் பண்ணாமல் சுடுதண்ணீரில் போட்டு நன்றாக வாஷ்பண்ண வேண்டும். (ஏன்.. தோலை கட் பண்ணக் கூடாதுன்னா தோல்லதான் விட்டமின் – "ஏ" சத்து அடங்கியிருக்கு) அடியையும் நுனியையும் கட் பண்ணி வெட்டி வைக்கவும்.

• வெள்ளரியை தோல் நீக்கி கட் பண்ணிக்க வேண்டும்.

• தக்காளியை மேலே ரவுண்டா வெட்ட வேண்டும்.

• கேரட், வெள்ளரி, தக்காளி உப்பு, எலுமிச்சை சாறு,  சுகர்ஃபிரீ, வெள்ளை மிளகு தூள் எல்லாத்தையும் சேர்த்து அப்படியே மிக்ஸியில் ஒரு அடி அடித்தால்போதும் "திக்"கான சன் ஷைன் ஜூஸ் ரெடி. தண்ணீர் தேவையான அளவுக்கு ஊத்தினால் போதும்.

• தோல் சருமத்துக்கு இது ரொம்ப ரொம்ப நல்ல ஜூஸ்.




மேங்கோ, நிலக்கடலை சாலட்

width="200"


தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கிய மாங்காய் - 1 கப்
பச்சை மிளகாய்- 1
வெங்காயம் - 1
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது
நிலக்கடலை - 1/4 கப்
வெண்ணெய் - 2ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு.

செய்முறை:

• வெண்ணெயில் நிலக்கடலையை வருத்து ஆற வைக்கவும்.

• வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மங்காய்த்துண்டுகளுடன், வெங்காயம் பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு கலந்து நிலக்கடலை, உப்பை சேர்க்கவும்.

• கடைசியாக கொத்தமல்லித்தழை, தேன் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்




நெல்லிக்காய் தயிர் பச்சடி

width="200"


தேவையான பொருட்கள்:    

நெல்லிக்காய் – 6
தயிர் – 1 கப்
பச்சை மிளகாய் – 1
இஞ்சி – ஒரு சிறு துண்டு
உப்பு – தேவைக்கேற்றவாறு    
நல்லண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்    
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்   
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

செய்முறை:    


• நெல்லிக்காயை கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, கொட்டையை நீக்கி விடவும். நெல்லிக்காய் துண்டுகளுடன், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.    

• தயிரை நன்றாகக் கடைந்து அதில் அரைத்த விழுதையும் உப்பையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.    

• வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும் கடுகு போட்டு வெடித்தவுடன், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, பச்சடியில் கொட்டிக் கலக்கவும்.





எள் சப்பாத்தி

width="200"


தேவையானவை:

வெள்ளை எள் - கால் கப் 
கோதுமை மாவு – ஒரு கப்
தனியா – 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• முதலில் எள்ளை வெறும் கடாயில் வறுக்கவும்.

• தனியா, மிளகு, சீரகம் மூன்றையும் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து, இதனுடன் வறுத்த எள்ளை சேர்த்துப் நன்கு பொடிக்கவும்.

• கோதுமை மாவுடன் வறுத்து பொடித்த பொடி, உப்பு, நெய் சேர்த்துக் கலந்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும்.

• இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.





பேபிகார்ன் சப்பாத்தி

width="200"


 
தேவையானவை:
 
துருவிய பேபிகார்ன் – கால் கப்
கோதுமை மாவு – ஒரு கப்
 பொடியாக நறுக்கிய குடமிளகாய், பச்சை மிளகாய் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
 
செய்முறை:
 
• துருவிய பேபிகார்னுடன், குடமிளகாய், பச்சை மிளகாய், உப்பு, கோதுமை மாவு சேர்த்து கெட்டியாகக் கலந்து, தண்ணீர் தெளித்து பிசைந்து, சப்பாத்திகளாக இடவும்.
 
* காயும் தோசைக்கல்லில் சப்பாத்திகளைப் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.





ஓட்ஸ்,வெஜிடபிள் சூப்

width="200"


தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – 2 மேசைக்கரண்டி
வேகவைத்த பருப்பு தண்ணீர் – 2 டம்ளர் காரட்,பீன்ஸ்,கோஸ்,காளிபிளவர்,ப.பட்டாணி -தலா 25 கிராம்
பச்சை மிளகாய் -1
இஞ்சி – சிறிது
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் -1தேக்கரண்டி

செய்முறை:

• ப.மிளகாய், காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

* குக்கரில் வேகவைத்த பருப்புத் தண்ணீருடன் ஓட்ஸ், இஞ்சி, நறுக்கிய காய்கறிகள் அனைத்தையும் போட்டு வேகவைக்க வேண்டும்.

* பின்பு அதை மத்தினால் கடைந்து, தேவையான தண்ணீர் சேர்த்து வடிகட்டி கொதிக்க விடவும்.

* ஒரு கொதி வந்தவுடன் உப்பு மற்றும் மிளகு தூள் தூவி இறக்கி பரிமாறவும்.





தக்காளி தயிர் பச்சடி

width="200"


தேவையான பொருட்கள்:

தக்காளி – 2
தயிர் – 2 கப்
பச்சைமிளகாய் – 2    
புதினா – சிறிது
இஞ்சி – சிறு துண்டு
நல்லெண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்.
சீரகம் – 1 டீஸ்பூன்    
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – 1 டீஸ்பூன்

செய்முறை:

* தக்காளியை நடுத்தரத் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். 

* தயிரை நன்றாகக் கடைந்துக் கொள்ளவும்.

* இஞ்சி, பச்சைமிளகாய், புதினா ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அத்துடன் பெருங்காயத்தூள், நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், புதினா சேர்த்து சிறிது வதக்கவும். பின்னர் அதில் தக்காளித் துண்டுகளைப்போட்டு சற்று கிளறி சிறு தீயில் மூடி வைத்து ஒரு நிமிடம் வேகவிடவும். (குழைய விடக்கூடாது).    

• வெந்த தக்காளியை தயிரில் சேர்த்து, உப்பு போட்டு கலக்கவும்.

• பச்சை கொத்துமல்லி அல்லது சிறிது புதினா தழையைத் தூவி பரிமாறவும்





தக்காளி செலரி ஜூஸ்

width="200"


தேவையான பொருட்கள்....
 
* தக்காளி - 3    
* செலரி தண்டு - சிறிது    
* உப்பு - தேவைக்கேற்ப    
* தேன் - 2 ஸ்பூன்   
* எலுமிச்சை ஜூஸ் - 1 ஸ்பூன்       
* பெப்பர் - 1 ஸ்பூன்   
 
செய்முறை....      
 
*  மிக்ஸியில் தக்காளி, செலரி தண்டு, உப்பு, பெப்பர் சேர்த்து அரைக்கவும். 
 
• அரைத்தை வடிகட்டி அதில் தேன், எலுமிச்சை ஜூஸ் கலந்து பரிமாறவும்.





நெல்லிக்காய் மோர் ஜூஸ்

width="200"


தேவையானவை:

நெல்லிக்காய் - 4
மோர் - ஒரு கப்
உப்பு, பெருங்காயம் - தேவையான அளவு.

செய்முறை:

* நெல்லிக்காயின் கொட்டையை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

• இதனுடன் பெருங்காயம், மோர் சேர்த்துக் கலக்கி, குளிர வைத்து பருகலாம்.

குறிப்பு: வைட்டமின் 'சி' நிறைந்த இந்த எனர்ஜி டிரிங், வயதானவர்களுக்கு மிகவும் ஏற்றது.





வெஜ் ராய்த்தா

width="200"


தேவையானவை:
 
தயிர் (கடைந்தது) - ஒரு கப்
வெள்ளரி கேரட் - தலா ஒரு துண்டு
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
உப்பு - தேவையான அளவு.
 
செய்முறை:
 
* தக்காளி, பச்சை மிளகாய், வெள்ளரி ஆகியவற்றை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
 
•  கேரட்டை துருவிக் கொள்ளவும்.
 
• இஞ்சியை தோல் சீவி துருவவும்.
 
• தயிருடன் உப்பு, துருவிய கேரட், இஞ்சி மற்றும் பொடியாக நறுக்கிய தக்காளி, வெள்ளரி, பச்சை மிளகாய் சேர்த்துக் கலக்கி, குளிர வைத்து பரிமாறவும்.
 
• இந்த வெஜ் ராய்த்தா மிகவும் சுவையாக இருக்கும்.





கோதுமை ரவா இட்லி

width="200"

தேவையான பொருட்கள்:-
 
 
கோதுமை ரவா- 1 கப்.
தயிர் – 1 1/2 கப்.
கடுகு- 1 தேக்கரண்டி.
உளுந்தம் பருப்பு- 1 தேக்கரண்டி.
கடலைப் பருப்பு- 1 தேக்கரண்டி.
பச்சை மிளகாய்-1.
கொத்தமல்லி, கறிவேப்பிலை- சிறிது.
உப்பு– தேவையான அளவு.
எண்ணெய்- 1 ஸ்பூன்.
 
செய்முறை:-
 
* கோதுமை ரவையையும், தயிரையும் கலந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
 
* பின் சிறிது எண்ணெயில் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதை ரவை கலவையில் கொட்டவும்.
 
* தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
 
* இந்த கலவையை இட்லி பாத்திரத்தில் இட்லியாக ஊற்றி ஆவியில் வேக வைக்கவும். இதற்கு சரியான காம்பினேஷன் மிளகாய் துவையல் மற்றும் தேங்காய் சட்னியாகும்.





ஆப்பிள் சோடா

width="200"


தேவையான பொருட்கள்...

ஆப்பிள் - ஒன்று
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
தேன் - 2 ஸ்பூன்
சோடா - தேவையான அளவு.

செய்முறை:

• ஆப்பிளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.

• இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து குளிர வைக்கவும். பரிமாறும்போது சோடா சேர்த்து கலந்து பரிமாறவும்.





 
 
Copyright © யாழ் மண்கும்பான்
Blogger Theme by BloggerThemes Design by Diovo.com